கடந்த டிசம்பர் (2012) 20ம் தேதி பாராளுமன்றத்தின் 12வது கூட்ட்த்தொடர் முடிவடைந்துள்ளது. இந்த 15வது மக்களவையின் 12 கூட்டத்தொடர் வரை, 282 அமர்வுகள் (sitting) நடத்தப்பட்டுள்ளன். இந்த 15வது மக்களவை துவங்கிய 4 ஜூன் 2009 முதல் நடந்து முடிந்த 12வது கூட்டத்தொடர் முடிய (20 டிசம்பர் 2012), நம்முடைய மக்களவை பிரதிநிதிகள் எப்படி பங்கேற்றார்கள் என்பதை கீழ்கண்ட அட்டவணையில் காணலாம்.
வழக்கம்போல், திருநெல்வெலி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் திரு எஸ். எஸ். இராமசுப்பு அவர்கள் விவாதங்கள், தனிநபர் மசோதா மற்றும் கேள்விகள் கேட்பது என்கிற் மூன்றின் கூட்டுத்தொகையில் அகில இந்திய அளவில் இரண்டாவதாக இருக்கிறார். தமிழகத்தில் முதலாவதாகவும் இருக்கிறார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக, பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷனின் ‘சன்சத் ரத்னா’ விருதை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தொலைபேசி பேட்டியை கீழே கேட்கலாம்.
மக்களவையில் சிறந்த பணியாற்றிய தமிழக எம்.பிக்கள். (4 ஜூன் 2009 முதல் 20 டிசம்பர் 2012 முடிய)
திரு இராமசுப்பு அவர்கள் (காங்கிரஸ்), 132 விவாதங்களிலும், 2 தனியார் மசோதாக்களை சமர்ப்பித்தும், 821 கேள்விகள் கேட்டும் தமிழகத்தில் முதலிடத்தில் இருக்கிறார். (மொத்தம் 955). 97% அமர்வுகளில் (attendance) கலந்து கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி தொகுதி திமுக உறுப்பினர் திரு சுகவனம் அவர்கள் 18 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். 679 கேள்விகள் கேட்டுள்ளார். (மொத்தம் 697). 55% அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளார். கேள்வி கேட்பதிலும், மொத்தக்கூட்டுத் தொகையிலும் , தமிழகத்தில் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.
தர்மபுரி தொகுதி திமுக உறுப்பினர் திரு தாமரைசெல்வன் அவர்கள் 90 விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார். 3 தனியார் மசோதாவை சமர்ப்பித்துள்ளார். 532 கேள்விகள் கேட்டுள்ளார். (மொத்தம் 625). 82% அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளார். மொத்த கூட்டத்தொகையிலும், விவாதங்களிலும் தமிழக அளவில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். தனியார் மசோதா பிரிவில் இரண்டாமிடம் பெறுகிறார்.
சேலம் தொகுதி அதிமுக உறுப்பினர் திரு செம்மலை அவர்கள் 98 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். 4 தனியார் மசோதாக்களை மக்களவையில் சமர்ப்பித்துள்ளார். 428 கேள்விகள் கேட்டுள்ளார். (மொத்த கூட்டுத்தொகை 528). 84% அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளார். தமிழ்நாட்டு உறுப்பினர்களில் தனியார் மசோதா பிரிவில் முதலிடமும், விவாத பிரிவில் இரண்டாமிடமும் பெறுகிறார்.
இவ்ர்கள் தவிர திரு சிவசாமி (அதிமுக - திருப்பூர்) மற்றும் திரு விசுவநாதன் (காங்கிரஸ் - காஞ்சிபுரம்) சிறந்த பணியாற்றியுள்ளார்கள்.
சிறந்த பணியாற்றி வரும் மக்களவை உறுப்பினர்களை பாராட்டுவோம். அவரகளது பணி சிறக்க வாழ்த்துவோம்.
தமிழக எம்.பிக்களின் சாதனைகள். (4 ஜூன் 2009 முதல் 20 டிசம்பர் 2012 முடிய)
MP name
|
Debates
|
Private Member Bills
|
Questions
|
Debates+Pvt bills+ questions
|
Attendance
|
S.S. Ramasubbu
|
132
|
2
|
821
|
955
|
97%
|
E.G. Sugavanam
|
18
|
0
|
679
|
697
|
55%
|
R. Thamaraiselvan
|
90
|
3
|
532
|
625
|
82%
|
C. Sivasami
|
49
|
0
|
507
|
556
|
69%
|
P. Viswanathan
|
26
|
0
|
502
|
528
|
87%
|
S. Semmalai
|
98
|
4
|
426
|
528
|
84%
|
S. R. Jeyadurai
|
11
|
0
|
493
|
504
|
56%
|
K. Sugumar
|
36
|
0
|
458
|
494
|
84%
|
P. Kumar
|
51
|
0
|
413
|
464
|
85%
|
S. Alagiri
|
22
|
0
|
440
|
462
|
70%
|
Abdul Rahman
|
25
|
0
|
416
|
441
|
68%
|
N.S.V. Chitthan
|
47
|
2
|
364
|
413
|
91%
|
Munisamy Thambidurai
|
74
|
0
|
292
|
366
|
83%
|
J.M. Aaron Rashid
|
46
|
0
|
312
|
358
|
67%
|
P. Lingam
|
65
|
0
|
291
|
356
|
96%
|
Manicka Tagore
|
27
|
0
|
317
|
344
|
90%
|
A. Ganeshamurthi
|
23
|
0
|
317
|
340
|
72%
|
P.R. Natarajan
|
26
|
0
|
294
|
320
|
88%
|
C. Rajendran
|
33
|
0
|
282
|
315
|
72%
|
P. Venugopal
|
26
|
0
|
280
|
306
|
88%
|
A.K.S. Vijayan
|
20
|
0
|
241
|
261
|
54%
|
K. Murugesan Anandan
|
17
|
1
|
180
|
198
|
89%
|
Davidson J. Helen
|
32
|
0
|
119
|
151
|
79%
|
Thalikkottai Rajuthevar Baalu
|
28
|
0
|
108
|
136
|
81%
|
Sivakumar @ J.K. Ritheesh. K
|
15
|
0
|
116
|
131
|
39%
|
Adhi Sankar
|
8
|
0
|
106
|
114
|
54%
|
O. S. Manian
|
37
|
0
|
28
|
65
|
63%
|
M. Krishnaswamy
|
8
|
0
|
50
|
58
|
90%
|
T.K.S. Elangovan
|
41
|
0
|
15
|
56
|
94%
|
Thirumaa Valavan Thol
|
27
|
0
|
17
|
44
|
46%
|
Danapal Venugopal
|
24
|
0
|
5
|
29
|
63%
|
Dayanidhi Maran
|
0
|
0
|
0
|
0
|
64%
|
Andimuthu Raja
|
0
|
0
|
0
|
0
|
22%
|
(நன்றி: PRS India)
இந்த பதிவு எழுதுவதற்காக திரு இராமசுப்பு அவர்களை (திருநெல்வேலி) தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாங்கள் பேட்டி எடுத்தோம். அவர் மக்களவையில் எந்த பிரச்சனைகளைப் பற்றி பேசினார் (தேசியம், மாநிலம், தொகுதி), 2012ல் அவர் தன்னுடைய தொகுதிக்கு ஆற்றிய பணிகள், 2013ல் அவர் செய்ய நினைக்கும் கனவ்த்திட்டங்கள் ஆகியவைகளை சுவையாக கூறினார். அவரது பேட்டியை நீங்களும் கேட்கலாம். (7 நிமிடங்கள்)
அவரது பேட்டி கீழ்கண்ட யூடியூபிலும் கேட்கலாம்.
0 comments:
Post a Comment